கள்ளழகர் வைகை இறங்கல் முதல் பூப்பல்லக்கு வரை 🌸 | Chithirai Festival 2025 Full Details

மதுரையில் சித்திரை பெருவிழா தொடக்கம்

 

கொட்டகை முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில், சித்திரைத் திருவிழா பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கின.

இதையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் இன்று காலை, ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் மற்றும் கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இந்த நிகழ்வில்,

  • மீனாட்சியம்மன் கோவில் மற்றும்

  • கள்ளழகர் கோவில்
    இரண்டும் சேர்ந்த அறங்காவல் குழு உறுப்பினர்கள், பட்டர்கள் கலந்து கொண்டனர். சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில், வெற்றிலை பாக்கு வழங்கி திருவிழா அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,
தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


முக்கிய நிகழ்ச்சிகள்:

  • மே 10 : கள்ளழகர் அழகர்கோவிலிலிருந்து புறப்பாடு

  • மே 11 : மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை

  • மே 12 : காலை 5.45 - 6.05 மணி வரை, வைகையில் எழுந்தருளல்

  • மே 13 : ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம், நள்ளிரவில் தசாவதாரம்

  • மே 14 : தல்லாகுளத்தில் பூப்பல்லக்கு

  • மே 15 : அழகர்மலைக்கு புறப்பாடு

  • மே 18 : சித்திரைத் திருவிழா நிறைவு


மதுரை சித்திரைத் திருவிழா பணிகள் தொடங்கியுள்ளதை மக்களும் பக்தர்களும் மகிழ்வோடு எதிர்நோக்குகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post