திரிசூல வாராகி அம்மன் - The 17 Feet Tall Divine Power of Seerkazhi

திரிசூல வாராகி அம்மன் -  சீர்காழி


திரிசூல வாராகி அம்மன் - 17 அடி உயர சிலையின் சிறப்புகள் :

தமிழ்நாட்டில் பல உயரமான தெய்வ சிலைகள் உள்ளன. அந்த வரிசையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள காரைமேடு கிராமத்தில் 17 அடி உயரம் கொண்ட மகா திரிசூல வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.




வாராகி அம்மன் சிறப்புகள் :

வாராகி அம்மன் சப்த கன்னிமார்களில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார்.

திரிசூலத்திலிருந்து வெளிப்படுபவர் என்பதால், சிவனால் நியமிக்கப்பட்ட அஸ்திர தேவர் என கருதப்படுகிறது.

இந்த அம்மனை வழிபட்டால், நம்மை பாதிக்கக்கூடிய அனைத்து தடைகளும் நீங்கும் என்றும், நம் நினைத்த காரியங்கள் இலகுவாக நடைபெறும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

சிலையின் சிறப்பு :

உலகிலேயே உயரமான வாராகி அம்மன் சிலைகளில் ஒன்றாக கருதப்படும் இச்சிலை 17 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 17 அடி உயர திரிசூலம் அம்மனின் பின்னால் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய மிகுந்த ஆற்றல் வாய்ந்த வாராகி அம்மனை தரிசிப்பதன் மூலம், பக்தர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post