பரமக்குடியில் சித்திரைத் திருவிழா
ராட்டிணங்களுக்கு உயர்நீதிமன்ற அனுமதி உத்தரவு
பரமக்குடியில் நடைபெறும் ஸ்ரீசுந்தராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தொடர்பாக, வைகை ஆற்றின் மேற்கு பக்கத்தில் ராட்டிணங்கள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மனுதாரர்கள் பிரபாகர், இளையாண்குடி முனியாண்டி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில்,
- ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவில் சிறிய, பெரிய இராட்டிணங்கள் அமைப்பது வழக்கமாக இருந்து வருவதாகவும்,
- இந்த ஆண்டு 11.05.2025 முதல் 17.05.2025 வரை திருவிழா நடைபெறவுள்ளதால், உரிய பாதுகாப்புடன் இராட்டிணங்கள் அமைக்க அனுமதி கோரியிருந்தனர்.
அரசுத் தரப்பு, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அனுமதி மறுத்த நிலையில்,
மனுதாரர்கள் தரப்பில், "பழங்காலமாக நடைபெறும் கிராம விழா பொழுதுபோக்கு இது" என வாதிட்டு, உறுதி விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து,
நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு,
- மனுதாரர்கள் பொது பணித்துறையில் மனு அளிக்க வேண்டும்,
- பொது பணித்துறை உறுதி நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

إرسال تعليق