மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2025 –
உலகங்காணும் திருமண மகோற்சவம்!
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (மே 7, 2025) காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை மிதுன லக்கணத்தில், ஆன்மிக அன்பும் பாரம்பரிய மரபும் கலந்த திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாண மேடை, நறுமணம் வீசும் மதுரை மல்லிகை, வண்ண மலர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, நவதானிய அலங்காரம், சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா கொண்டு அலங்கரிக்கப்பட்டு, சுவாமி-அம்மன் மணக்கோலத்தில் எழுந்தருளினர்.
திருக்கல்யாண வைபவத்தில் பவளகனிவாய் பெருமாள், தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, சிவாச்சாரியார்களின் காப்பு கட்டும் நிகழ்வுகள், மற்றும் மணப்பெண்கள் தாலிகயிறு புதுப்பிப்பு என ஆன்மிக நம்பிக்கையை ஊட்டும் பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனை முன்னிட்டு 10 டன் மலர்கள், 500 கிலோ பழங்கள், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடாக 3000 காவல்துறையினர் மற்றும் 20 எல்இடி திரைகள், 300 டன் ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது.

إرسال تعليق